Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 424)

Paththati 14 - நாத பத்ததி

ஆகஸ்மிகேஷு ஸமயேஷு அபவார்ய ப்ருத்யாந் அந்த:புரம் விசதி ரங்கபதௌ ஸலீலம் வ்யாமோஹநேந பவதீ ஸுத்ருசாம் அதீதே மஞ்ஜுஸ்வநேந மதநோபநிஷத் ரஹஸ்யம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவீதிகளில் ஸஞ்சாரமாகச் சென்று கொண்டிருக்கும் நம்பெருமாள் திடீரென அதனை நிறுத்திவிட்டு, தனது அந்தப்புரத்தில் நுழையக்கூடும். அந்த நேரத்தில் அவன் அவ்வாறு வருவதை, நீ முன்கூட்டியே உனது நாதந்தினால் அறிவிக்கிறாய். இதனால் அங்குள்ள பிராட்டிகளுக்கு மன்மத சாஸ்த்ரங்களை ஓதி, அவர்களை மயங்க வைக்கிறாய் போலும்.