Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 423)

Paththati 14 - நாத பத்ததி

ரத்யாஸு ரங்கந்ருபதே மணிபாதரக்ஷே த்வத் கர்ப்ப ரத்ந ஜநித: மதுர: ப்ரணாத: ஸந்தர்சந உத்ஸுக தியாம் புரஸுந்தரீணாம் ஸம்பத்யதே ச்ரவணமோஹன மந்த்ரகோஷ:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு திருவரங்கத்தின் திருவீதிகளில் ஸஞ்சாரம் செய்கிறான். அப்போது உன்னுள்ளே இருக்கும் இரத்தினக்கற்கள் இனிமையான நாதம் செய்கின்றன. இதனைக் கேட்ட அங்கிருந்த பெண்களின் காதுகள், எதிரில் நிற்கும் நம்பெருமாளையும் மறந்து, அந்தச் சப்தத்தில் மயங்கி நின்றன.