Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 422)

Paththati 14 - நாத பத்ததி

ஆம்ரேடித ச்ருதிகணைர் நிநதை: மணீநாம் ஆம்நாய வேத்யம் அனுபாவம் அபங்குரம் தே உத்காஸ்யதாம் நியதம் இச்சஸி ஸாமகாநாம் காந ப்ரதாநம் இவ சௌரி பதாவநி த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களால் அறியக்கூடிய உன்னுடைய மேன்மையைக் குறித்து சாமவேதம் அறிந்தவர்கள் கூறியபடி உள்ளனர். நீ அவர்களின் வேதத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு மேலும் சங்கீதம் கற்றுக் கொடுக்க விரும்புகிறாய் போலும். அதனால்தான் உனது இரத்தினக்கற்கள் கொண்டு இனிய ஒலி எழுப்பியபடி உள்ளாய் போலும்.