Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 421)
Paththati 14 - நாத பத்ததி
ப்ராய: பதாவநி விபோ: ப்ரணதார்த்தி ஹந்து: ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதம உத்யதாநி த்வத் சிஞ்ஜிதாநி ஸபதி ஸ்வயம் ஆரபந்தே காலோசிதாந் கனக காஹள சங்கநாதான்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னை வணங்கி நிற்பவர்களின் துயரம் அனைத்தையும் நீக்குபவனாகிய நம்பெருமாள் ஸஞ்சாரம் செய்யத் தயாராகிறான். அந்த சுபநேரத்தை குறிக்கும் வகையில் உனது இனிமையான நாதங்கள் எழுகின்றன. இதனைக் கேட்ட எக்காளம், சங்கு ஆகிய வாத்தியங்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன.