Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 420)
Paththati 14 - நாத பத்ததி
நித்யம் பதாம்புருஹயோ: இஹ கோபிகாம் த்வாம் கோபீஜநப்ரியதமோ மணிபாதரக்ஷே ஸம்பந்ந கோஷ விபவாம் கதிபி: நிஜாபி: ப்ரீத்யேவ ந த்யஜதி ரங்கஸமாச்ரிதோபி
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! கோபிகைகளுக்கு மிகவும் ப்ரியமானவனாகிய நம்பெருமாள், தனது ஸஞ்சாரங்கள் முடிந்து ஸ்ரீரங்க விமானத்தை அடைந்த பின்னரும் உன்னை விடுவதில்லை. மிகவும் இனிமையான நாதம் கொண்ட உன்னை அவன் கோபிகை என்றே கருதியுள்ளான் போலும்.