Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 419)
Paththati 14 - நாத பத்ததி
ரக்ஷார்த்தம் ஆச்ரித ஜநஸ்ய ஸமுஜ்ஜிஹாநே ரங்கேச்வரே சரதி சேஷபுஜங்க தல்பாத் நாதாஸ்தவ ச்ருதிஸுகா மணிபாதரக்ஷே ப்ரஸ்தாந சங்கநி நதாத் ப்ரதமே பவந்தி
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சரத் காலத்தின்போது (ஐப்பசி மாதம்) தன்னை அண்டியவர்களைக் காப்பதற்காக ஆதிசேஷன் என்ற படுக்கையை விட்டு எழுகிறான். அப்போது அனைவரின் காதுகளுக்கும் இனிமையாக உள்ள உனது நாதங்கள், அவனது புறப்பாடு நேரத்தில் ஊதப்படும் சங்கின் ஒலியை விட முந்தியதாக ஒலிக்கின்றன.