Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 418)

Paththati 14 - நாத பத்ததி

ஸ்வச்சந்த விப்ரமகதௌ மணிபாதுகே த்வம் பாதாரவிந்தம் அதிம்கம்ய பரஸ்ய பும்ஸ: ஜாதஸ்வநா ப்ரதிபதம் ஜபஸீவ ஸூக்தம் வித்ராவணம் கிமபி வைரிவரூதிநீநாம்

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாள் தனது விருப்பத்தின்படி ஸஞ்சாரம் என்ற விளையாட்டைச் செய்தபடி உள்ளான். நீ அப்போது அவனது திருவடிகளை அடைந்து, இனிமையான நாதம் உண்டாகப் பெற்றாய். அவன் அருகில் வர முயற்சிக்கும் அவனது சத்ரு சேனைகளை, அவன் அருகில் வர விடாமல், உனது நாதம் மூலம் ஏதோ ஒரு மந்திரத்தை ஜபிக்கிறாய் போலும்.