Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 417)
Paththati 14 - நாத பத்ததி
தேவஸ்ய தாநவரிபோ: மணிபாதரக்ஷே ப்ரஸ்தாந மங்கள விதௌ ப்ரதிபந்த நாதாம் மா பைஷ்ட ஸாதவ இதி ஸ்வயம் ஆலபந்தீம் ஜாநே ஜகத் த்ரிதய ரக்ஷண தீக்ஷிதாம் த்வாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அசுரர்களுக்கு சத்ருவாக நம்பெருமாள் உள்ளான். அவனுடைய ஸஞ்சாரம் என்ற சுப செயலின் இனிமையான நாதத்தை நீ அடைகிறாய். மூன்று உலகங்களையும் காப்பதில் நீ உறுதியுடன் உள்ளாய் போலும். அதனால்தான் உனது நாதம் மூலம், ”நல்லவர்களே! நீங்கள் அஞ்சவேண்டாம்”, என்று கூறுகிறாய் என நான் எண்ணுகிறேன்.