Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 416)

Paththati 14 - நாத பத்ததி

ஸ்தோதும் ப்ரவ்ருத்தம் அபி மாம் நிகம ஸ்துதாம் த்வாம் வ்யாஸஜ்யமாந கரணம் விஷயேஷு அஜஸ்ரம் அந்தர்மணி த்வநிபி: அச்யுத பாதுகே த்வம் ஸம்போதயஸி அநுகலம் ஸஹஜ அநுகம்பா

அடியார்களை நழுவ விடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்களில் துதிக்கப்பட்ட உன்னை நான் துதிக்கத் தொடங்குகிறேன். ஆயினும் நான் அந்தத் துதிகளில் கவனம் செலுத்தாமல், உலக விஷயங்களில் நாட்டம் கொண்டபடி உள்ளேன். இதனைக் கண்ட நீ, என் மீது இயல்பாகவே தயையுடன் உள்ளவளான நீ, செய்வது என்ன - உன்னுடைய இரத்தினக்கற்களின் இனிமையான நாதம் மூலம் எனது கடமையை நினைவுபடுத்தியப்படி உள்ளாய்.