Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 415)

Paththati 14 - நாத பத்ததி

தூத்யே பலேர்விமதநே சகடஸ்ய பங்கே யாத்ரா உத்ஸவேஷு ச விபோ: ப்ரதிபந்நஸக்யா வீராயிதாநி பிருதோபஹிதாநி நூநம் மஞ்ஜுஸ்வநை: ப்ரதயஸே மணிபாதுகே த்வம்

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் பாண்டவர்களுக்காகத் தூது சென்றான்; மஹாபலிச்சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்கினான்; சகடாஸுரனை முறித்தான். இப்படியாக அவன் நடந்திய வீரச்செயல்கள் காரணமாக அவனுக்கு ஏற்பட்ட பட்டப்பெயர்களை, அவன் திருவடிகளை விட்டு எப்போதும் பிரியாமல் உள்ள நீ, உனது இனிய நாதங்கள் மூலம் கூறியபடி உள்ளாய் போலும்.