Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 414)

Paththati 14 - நாத பத்ததி

ஆர்த்தத்வநே: உசிதம் உத்தரம் அந்தகாலே கர்ணேஷு மஞ்ஜுநிநதேந கரிஷ்யஸீதி வாஸம் பஜந்தி க்ருதிநோ மணிபாதரக்ஷே புண்யேஷு தேவி புளிநேஷு மருத்வ்ருதாயா:

இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தங்களது இறுதி காலத்தில் பெரியவர்கள், மிகவும் தூய்மையான காவேரியின் மணல்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் வாஸம் செய்கின்றனர். ஏன் தெரியுமா? தங்களது முடிவு காலத்தில் ஏற்படவுள்ள வேதனை காரணமாக எழுப்பும் துன்ப ஒலிகளை, உன்னுடைய செவிகளில் உள்வாங்கி, அவர்களுக்கான மறுமொழியை உனது நாதத்தினால் அளிப்பாய் என்பதால் ஆகும்.