Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 413)
Paththati 14 - நாத பத்ததி
ப்ராஸ்தாநிகேஷு ஸமயேஷு ஸமாகதேஷு ப்ராப்தா பதம் பரிசிதம் த்விஜபுங்கவேந புஷ்ணாஸி ரங்கந்ருபதே: மணிபாதுகே த்வம் புண்யாஹ கோஷம் இவ கர்ப்பமணி ப்ரணாதை:
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யவேண்டிய காலகட்டங்களில், பறவைகளில் உயர்ந்தவனான கருடனால் அடிக்கடி அடைப்படும் திருவடிகளை நீ அடைகிறாய். உன்னுள் இருக்கும் இரத்தினக்கற்கள் அப்போது இனிமையான நாதம் ஏற்படுத்துகின்றன. இதனைக் காணும்போது க்ஷேமம் அளிக்கவல்ல மந்திரங்களை நீ கூறுவது போன்று உள்ளது.