Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 412)
Paththati 14 - நாத பத்ததி
மதுத்விஷ: ஸ்வைர விஹாரஹேது: மஞ்ஜுஸ்வநாந் சிக்ஷயஸீவ மாத: பர்யந்த பாஜோர் மணிபாதரக்ஷே பத்மாதரண்யோர் மணிநூபுராணி
இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! தாயே! மது என்ற அரக்கனின் சத்ருவாகிய நம்பெருமாளின் இருபக்கமும் அமர்ந்துள்ள ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய இருவரின் தண்டைகள் இனிமையான ஒலி எழுப்புகின்றன. நம்பெருமாளுடன் உன் விருப்பப்படி ஸஞ்சாரம் செய்யும் நீ, உனது இனிய நாதத்தை அந்தத் தண்டைகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் போலும்.