Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 411)
Paththati 14 - நாத பத்ததி
அவைமி ரங்காதிபதே: ஸகாசாத் அவேக்ஷமாணேஷு ஜநேஷு ரக்ஷாம் உதார நாதாம் மணிபாதுகே த்வாம் ஓம் இதி அநுஜ்ஞாக்ஷரம் உத்கிரந்தீம்
இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! மிகவும் கம்பீரமான முறையில் நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிறான். அப்போது ஏற்படும் உனது சப்தம் எவ்விதம் உள்ளது தெரியுமா? தங்கள் துன்பத்தை நீக்க வேண்டும் என்று நம்பெருமாளிடம் வேண்டுபவர்களிடம், “அப்படியே ஆகட்டும்”, எனக் கூறுவது போல் உள்ளன.