Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 410)

Paththati 14 - நாத பத்ததி

ஸ்வாதூநி ரங்கேச்வர பாதரக்ஷே ச்ரோத்ரை: பிபந்தஸ்தவ சிஞ்ஜிதாநி பசந்தி அவித்யா உபசிதாந் அசேஷாந் அந்தர்கதாந் ஆத்மவித: கஷாயாந்

ஸ்ரீரங்கநதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சிறந்த ருசியுடன் கூடிய உன்னுடைய மருந்து போன்ற நாதங்களை, தங்களை முழுவதுமாக உணர்த்தவர்கள் தங்கள் காதுகளால் பருகுகின்றனர். இதனால் தங்களது அறியாமையால் உள்ளே வளர்ந்துள்ள உலக விஷயங்களின் மீதுள்ள ஆசை என்பதை அவர்கள் எரித்து விடுகின்றனர்.