Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 409)

Paththati 14 - நாத பத்ததி

அந்தே மம ஆர்த்திம் சமயிஷ்யதஸ்தாம் அக்ரே ஸராணி ஆபதத: முராரே: ச்ரமோபபந்ந: ச்ருணுயாம் பவத்யா: சீதாநி பாதாவநி சிஞ்ஜாதாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது அந்திம காலத்தில் மிகவும் களைப்புடன் நான் உள்ளபோது, அந்தத் துன்பத்தை நீக்க நம்பெருமாள் மிகவும் வேகமாக ஓடிவருவான். அப்போது அவனுக்கும் முன்பாக ஓடிவரும் உனது இனிமையான நாதத்தை நான் கேட்பேனாக.