Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 408)

Paththati 14 - நாத பத்ததி

ச்ரூணோது ரங்காதிபதி: ப்ரஜாநாம் ஆர்த்தத்வநீம் க்வாபி ஸமுஜ்ஜிஹாநம் இதீவ மத்வா மணிபாதுகே த்வம் மந்த ப்ரசாரை: ம்ருது சிஞ்ஜிதாஸி

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளை நீ உன் மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்கிறாய். அப்போது ஒரு சிலர் மிகுந்த வருத்தத்தில் இருந்தபடி நம்பெருமாளிடம் தங்கள் குறைகளைக் கூறக்கூடும். அவர்கள் கூறுவது அவன் செவிகளில் விழாமல் போய்விடுமோ என்று எண்ணி, மெதுவாக சப்தம் எழுப்பியபடி நீ செல்கிறாய்.