Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 407)
Paththati 14 - நாத பத்ததி
அநாதிமாயா ரஜநீவசேந ப்ரஸ்வாபபாஜாம் ப்ரதிபோதநார்ஹம் பச்யாமி நித்யாதி வாஸரஸ்ய ப்ரபாதநாந்தீமிவ பாதுகே த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தொடக்கம் என்பதே இல்லாத மாயை போன்றும், எப்போதும் இரவு என்னும்படியாக உள்ளதும் ஆகிய ஸம்ஸாரத்தில் துன்பம் அடைந்தபடி அனைவரும் உள்ளனர். இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய காலை நேரம் என்னும் மோக்ஷத்தை அறிவிக்கும் சுப்ரபாதம் போன்று உனது நாதம் உள்ளது.