Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 406)

Paththati 14 - நாத பத்ததி

உபாஸ்ய நூநம் மணிபாதுகே த்வாம் ரங்கேச பாதாம்புஜ ராஜஹம்ஸீம் பத்யு: ப்ரஜாநாம் அலபந்த பூர்வம் மஞ்ஜுஸ்வநம் வாஹந ராஜஹம்ஸா:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நம்பெருமாளின் திருவடிகளில் நீ ராஜஹம்ஸமாகத் திகழ்கிறாய். உனது இனிமையான நாதத்தின் மூலம், உன்னை உபாஸனம் செய்த ப்ரம்மனின் அன்னங்கள், அழகான குரலைப் பெற்றன போலும்.