Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 405)
Paththati 14 - நாத பத்ததி
ரங்காதீசே ஸஹ கமலயா ஸாதரம் யாயஜூகை: ஸாரம் திவ்யம் ஸவநஹ விஷாம் போக்தும் ஆஹூயமாநே நேதீயோபி: நிகமவசஸாம் நித்யம் அம்ஹ: ப்ரதீபை: ப்ரத்யாலாபம் திசதி பவதீ பாதுகே சிஞ்ஜிதை: ஸ்வை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யாகம் இயற்றுபவர்கள் அந்த வேள்வியின் அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீரங்கராச்சியாருடன் கூடியுள்ளவனான ஸ்ரீரங்கநாதனை அழைக்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன? அனைத்து வேதங்களுக்கும் ஒப்பாக உள்ளவையும், கேட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாவங்களையும் தொலைப்பதாக உள்ளதும் ஆகிய உனது இனிய நாதம் மூலம், அவர்களிடம், “இதோ! நம்பெருமாள் வந்து விட்டான்”, என்று அறிவிப்பதாக உள்ளாய்.