Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 404)

Paththati 14 - நாத பத்ததி

லக்ஷ்மீ காந்தம் கமபி தருணம் ரத்யாய நிஷ்பதந்தம் ராகாத் த்ரஷ்டும் த்வரிதமநஸாம் ராஜதாதீ வதூநாம் ப்ரத்யாதேசம் பஜதி மதுரை: பாதுகே சிஞ்ஜிதைஸ்தே சேதோஹாரீ குஸுமதநுஷ: சிஞ்ஜிநீ மஞ்ஜுநாத:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான நம்பெருமாள் உன்னைச் சாற்றிக்கொண்டு திருவரங்கத்தின் வீதிகளில் ஸஞ்சாரமாக வருகிறான். மிகவும் அழகான இளைஞனாக உள்ள அவனைக் காண ஆசை கொண்டு, திருவரங்கத்தின் பெண்கள் ஓடி வருகின்றனர். அவர்களது மனதை இவ்விதம் காமதேவன் தனது வில் கொண்டு சப்தம் செய்கிறான். அவனது வில்லின் ஓசையானது, உன் இனிமையான நாதத்தின் மூலம் தள்ளப்பட்டுவிடுகிறது.