Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 403)

Paththati 14 - நாத பத்ததி

ஆம்நாயை: த்வாம் அநிதரபரை: ஸ்தோதும் அப்யுத்யதாநாம் மத்யே பக்த்யா மதுவிஜயிந: பாதுகே மோஹ பாஜாம் சிக்ஷா தத்த்வ ஸ்கலித வசஸாம் சிக்ஷயஸ்யேவ பும்ஸாம் மாத்ராதீநி ஸ்வயம் அநுபதம் மஞ்ஜுபி: ஸ்வைர் நிநாதை:

மது என்ற அசுரனை வெற்றி கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் அனைத்தும் உன்னைத் தவிர மற்ற யாரையும் உயர்வாகக் கூறுவதில்லை. அப்படிப்பட்ட வேதங்கள் கொண்டு உன்னைக் கூறியபடி வரும்போது, நடுவில் உன் மீது கொண்டுள்ள ப்ரியம் காரணமாக வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறியபடி உள்ளன. அப்போது அவர்களுக்கு எழுத்துக்களில் உள்ள குறில், நெடில் முதலானவற்றைப் பற்றிய விளக்கத்தை உனது இனிமையான நாதம் மூலம் புரிய வைக்கிறாய் போலும்.