Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 402)
Paththati 14 - நாத பத்ததி
விஷ்ணோர்: அஸ்மிந் பதஸரஸிஜே வ்ருத்திபேதைர் விசித்ரை: ஐதம்பர்யம் நிகமவசஸாம் ஐககண்ட்யேந ஸித்தம் இத்தம் பும்ஸாம் அநிபுணதியாம் பாதுகே த்வம் ததேவ ஸ்ப்ருஷ்ட்வா ஸத்யம் வதஸி நியதம் மஞ்ஜுநா சிஞ்ஜிதேந
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உபநிஷத்துக்களும் சேர்ந்து நின்று ஒரே குரலாக, தங்களது வெவ்வேறு ஆற்றல்கள் மூலமாக, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைப் பற்றியே பேசுகின்றன. இந்தச் சப்தமானது உனது இனிய நாதத்தை ஒத்துள்ளது. இதனை இவ்விதம் அறியாமல் உள்ளவர்களுக்கு, தாமரை மலர் போன்ற நம்பெருமாளின் திருவடிகளைத் தொட்டு, உனது நாதம் மூலமாகவே சத்தியம் செய்கிறாய் போலும்.