Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 401)

Paththati 14 - நாத பத்ததி

ப்ரக்யாதாநாம் பரிஷதி ஸதாம் காரயித்வா ப்ரதிஜ்ஞாம் ப்ராயேண த்வாம் ப்ரதித விபவாம் வர்ணயந்தீ மயா த்வம் பாதந்யாஸக்ரமம் அநுகுணாம் ப்ராப்ய ரங்காதிராஜாந் பத்ய ஆரம்பாந் கணயஸீ பரம் பாதுகே ஸ்வைர் நிநாதை:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் புகழுடைய பெரியவர்கள் நிறைந்த கூட்டத்தில் உன்னைப் பற்றிய ஆயிரம் ச்லோகங்களை இயற்றுகிறேன் என்று என்னைச் சபதம் செய்ய வைத்தாய். இதன் மூலம் எங்கும் புகழ் கொண்ட நீ, என் மூலமாக உனது புகழை மேலும் புகழ்ந்து கொண்டாய். ஒவ்வொரு ச்லோகமும் இயற்ற இயற்ற, நம்பெருமாள் திருவடிகளை எடுத்து வைப்பதற்கு ஏற்றபடி உள்ள உனது நாதம் கொண்டு ஒன்று, இரண்டு என்று ச்லோகங்களின் தொடக்கத்தை எண்ணுகிறாய் போலும்.