Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 400)
Paththati 14 - நாத பத்ததி
அந்தர் ந்யஸ்தைர் மணிபிருதிதம் பாதுகே ரங்கபந்தௌ மந்தம் மந்தம் நிஹிதசரணே மஞ்ஜுளம் தே நிநாதம் பச்யந்த்யாதி க்ரம பரிணதே: ப்ராக்தநீம் தாம் பராயா: மன்யே மித்ரா வருண விஷயாத் உச்சரந்தீம் அவஸ்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் வெதுவாகத் தனது திருவடியை வைக்கும்போது, உன்னுள்ளே இருக்கின்ற இரத்தினக்கற்கள் சப்தம் செய்கின்றன. இந்த இனிய நாதம் எப்படி உள்ளது என்றால், பச்யந்தீ என்ற முதல் அவஸ்தையை உடைய சப்தங்களைக் கொண்ட, நாபிக்கமலத்தில் இருந்து வெளியே எழும் முதல் அவஸ்தை போன்று உள்ளது.
நாபியில் இருந்து கிளம்பும் காற்றானது சப்தமாக வெளிவருகிறது. இந்தச் சப்தம் நான்கு நிலைகளில் உள்ளது – பரா, பச்யந்தி, மத்யமா மற்றும் வைகரி என்பதாகும். முதல் மூன்றும் நமது காதுகளால் நாம் கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகும்.