Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 399)
Paththati 14 - நாத பத்ததி
ஆஸ்தாநேஷு த்ரிதச மஹிதாந் வர்த்தயித்வா விஹாராந் ஸ்தாநே ஸ்தாநே நிஜபரிஜநம் வாரயித்வா யதார்ஹம் வாஸாகாரம் ஸ்வயம் உபஸரந் பாதுகே மஞ்ஜுநாதாம் ஆபர்யங்காத் ந கலு பவதீம் ரங்கநாத: ஜஹாதி
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சபா மண்டபங்களில் தனக்கு நடத்தப்படும் உபசாரங்களை ஏற்றபடி உள்ள ஸ்ரீரங்கநாதன், மீண்டும் அந்தப்புரம் திரும்பும்போது செய்வது என்ன? அவர்களில் யார் யாரை எந்த எந்த இடங்களில் நிறுத்த வேண்டுமோ அங்கங்கு நிறுத்தியபடி செல்கிறான். இனிமையான நாதம் உடைய உன்னை மட்டும் தன்னுடன் தனது கட்டிலைச் சென்று அடையும்வரை அவன் விடுவதில்லை.