Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 398)

Paththati 14 - நாத பத்ததி

அவநத விபுதேந்த்ர மௌளிமாலா மது மத சிக்ஷித மந்த்ர ப்ரயாதா ப்ரதயஸி பரிரப்த சௌரி பாதா மணிகலஹேந வியாத ஜல்பிதாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை வணங்கிப் பணியும் தேவர்களின் தலைகளில் உள்ள மாலைகளின் மதுவை நீ பருகுகிறாய் போலும். அதனால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக நீ மெதுவாக நடக்கிறாய். நம்பெருமாளின் திருவடிகளை எப்போதும் அணைத்தபடி, உன் மீது உள்ள இரத்தினக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள, இப்படியாக மது உண்ட மயக்கத்தில் பேசுகிறாய் போலும்.