Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 395)

Paththati 14 - நாத பத்ததி

தேவி தைத்ய தமநாய ஸத்வரம் ப்ரஸ்திதஸ்ய மணிபாதுகே ப்ரபோ: விச்வமங்கள விசேஷ ஸூசகம் சாகுநம் பவதி தாவகம் ருதம்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து அசுரர்களை அழிக்கும் எண்ணத்துடன் நம்பெருமாள் புறப்படுகிறான். அப்போது அவனுக்கு அனைத்து வெற்றியையும் உண்டாக்கவல்ல சுபமான சகுனங்களை எழுப்பும் பறவைகளின் ஒலியானது, உனது சப்தம் மூலமாக வெளிப்படுகிறது.