Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 394)
Paththati 14 - நாத பத்ததி
பாதுகே பரிஜநஸ்ய தூரத: ஸூசயந்தி கலு தாவகா: ஸ்வநா: லீலயா புஜகதல்பம் உஜ்ஜத: ஸ்ரீமத: த்ரிசதுராந் பதக்ரமாந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நம்பெருமாள் உன்னைச் சாற்றிக் கொண்டு எழுந்தருளுகிற சமயத்தில், உனது இனிமையான நாதமானது அவனுக்குக் கைங்கர்யம் செய்பவர்களின் காதுகளில் விழுகின்றன. தனது லீலைக்காக ஆதிசேஷனை விட்டு எழுந்து ஸஞ்சரிக்கும் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தை இவ்விதமாக உனது ஒலி தெரிவிக்கிறது அல்லவா?