Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 393)
Paththati 14 - நாத பத்ததி
பருஷை: அஜஸ்ரம் அஸதாம் அநர்த்தகை: பரிவாத பைசுந விகத்தந ஆதிபி: மதுகைடபாரி மணிபாதுகே மம ச்ருதி துஷ்க்ருதாநி விநிவாரய ஸ்வநை:
மது மற்றும் கைடபன் ஆகிய இரண்டு அசுரர்களையும் அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மற்றவர்கள் பற்றிக் கூறப்படும் புறங்கூறும் சொற்கள், தற்புகழ்ச்சி, மற்றவர்களைத் தூஷிக்கும் சொற்கள் ஆகியவை போன்று எந்தப் பலனும் இல்லாத சொற்களின் ஓசைகள் காரணமாக எனது காதுகள் பாவம் நிறைந்துள்ளன. உனது இனிமையான நாதம் மூலம் இந்தப் பாவங்களை நீ நீக்கவேண்டும்.