Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 392)

Paththati 14 - நாத பத்ததி

அநுயாதி நித்யம் அம்ருதாத்மிகாம் கலாம் தவ ரங்கசந்த்ர மணிபாது ஜங்க்ருதம் ச்ரவஸா முகேந பரிபுஜ்ய யத் க்ஷணாத் அஜராமரத்வம் உபயாந்தி ஸாதவ:

இரத்தினக்கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! சந்த்ரகலை என்ற அமிர்தத்தை ஒக்கும்படி உன்னுடைய ஜம் என்ற சப்தம் உள்ளது. சந்த்ரகலை என்னும் அமிர்தத்தைப் பருகினால் மூப்பு மற்றும் மரணம் ஆகிய நிலைகள் ஏற்படாது. அது போன்றே உன்னுடைய நாதத்தைக் காது என்ற முகம் கொண்டு பருகினால், கிழட்டுத்தன்மையையும் மரணம் அற்ற தன்மையையும் நொடிப்பொழுதில் அளிக்கிறது.