Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 391)
Paththati 14 - நாத பத்ததி
ச்ரவஸோ: மம பாரணம் திசந்தீ மணிபாதாவநி மஞ்ஜுலை: பரணாதை: ரமயா க்ஷமயா ச தத்தஹஸ்தம் ஸமயே ரங்கதுரீணம் ஆநயேதா:
இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! என்னுடைய அந்திம காலத்தில் நீ செய்யவேண்டியது என்னவென்றால் - மஹாலக்ஷ்மியாலும், பூமாதேவியாலும் கைகள் தாங்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கநாதனை உனது இனிமையான நாதம் என் காதுகளில் இதமாக ஒலிக்கும்படி அழைத்து வரவேண்டும்.