Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 390)

Paththati 14 - நாத பத்ததி

மதுரம் மணிபாதுகே ப்ரவ்ருத்தே பவதீ ரங்கந்ருபதே விஹாரகாலே அபயார்த்த்நயா ஸமப்யுபேதாந் அவிஸம்வாதயதீவ மஞ்ஜுநாதை:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலத்தில் பலரும் அவன் அருகில் வந்து, தங்களுக்கு அபயம் அளிக்க வேண்டி நிற்கின்றனர். அப்போது நீ செய்வது என்ன? உன்னுடைய இனிமையான நாதம் மூலம், “அபயம் அளிக்கப்பட்டது”, என்று கூறுகிறாய் அல்லவோ?