Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 389)

Paththati 14 - நாத பத்ததி

முநய: ப்ரணிதாந ஸந்நிருத்தே ஹ்ருதி ரங்கேச்வர ரத்ந பாதுகே த்வாம் விநிவேச்ய விபாவயந்தி அநந்யா: ப்ரணவஸ்ய ப்ரணிதிம் தவ ப்ரணாதம்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினமயமான பாதுகையே! யோகிகள் தங்கள் மனதை, தங்களது யோகாப்யாஸம் மூலம் மற்ற விஷயங்களில் செல்லாதபடி நிலை நிறுத்துகின்றனர். அப்படிப்பட்ட மனதில் உன்னை த்யானிக்கின்றனர். மற்ற தேவதைகளையோ, மற்ற பலன்களையோ நாடாமல், ப்ரணவத்திற்கு ஆதாரமாக உள்ள உனது நாதத்தை மட்டுமே த்யானிக்கின்றனர்.