Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 388)

Paththati 14 - நாத பத்ததி

ச்ருதிபி: பரமம் பதம் முராரே: அநிதங்காரம் அநேவம் இதி உபாத்தம் இதம் இத்தம் இதி ப்ரவீஷி நூநம் மணிபாதாவநி மஞ்ஜுபி: ப்ரணாதை:

இரத்தினக்கற்கள் கொண்டு இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்று வேதங்கள் கூற முற்பட்டபோது, அவை அந்தத் திருவடிகள் இது எனக் கூற இயலாது, இப்படிப்பட்டது என்று கூற இயலாது - என்றே கூறுகின்றன. ஆனால் உனது இனிய நாதங்கள் மூலம் நீ அவன் திருவடிகள் இவை, இப்படிப்பட்டது - என்று தெளிவாகக் கூறுவது உண்மையே.