Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 387)
Paththati 14 - நாத பத்ததி
மதுவைரி பதாம்புஜம் பஜந்தீ மணிபாதாவநி மஞ்ஜு சிஞ்ஜிதேந படஸீவ முஹு: ஸ்வயம் ப்ரஜாநாம் அபரோபஜ்ஞம் அரிஷ்டசாந்தி மந்த்ரம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை நீ அடைந்து, இன்பமாக உள்ளாய். அப்போது உன்னிடம் இனிமையான நாதம் எழுகிறது. இது எப்படி உள்ளது என்றால் – இந்த உலகில் உள்ள மக்களின் அனைத்துத் துன்பங்களை நீக்கி, யாருக்கும் தெரியாத ஒரு மந்திரத்தை நீ உச்சரிப்பது போன்று உள்ளது.