Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 386)
Paththati 14 - நாத பத்ததி
முரபித் சரணாரவிந்த ரூபம் மஹித ஆனந்தம் அவாப்ய பூருஷார்த்தம் அநகை: மணிபாதுகே நிநாதை: அஹமந் நாத: இதீவ காயஸி தவம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! முரன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளின் வடிவுக்கு ஏற்றபடி நீ உள்ளாய். அவனது திருவடிகளின் தொடர்பு மூலம் பேரானந்தம் கொண்டு விளங்குகிறாய். இதன் மூலம் நீ பெரும் பேறு பெற்றாய் . உன்னுடைய இனிமையான ஒசை மூலம், ”நான் ப்ரஹ்மம் என்ற அன்னத்தை அனுபவிப்பவள்”, என்று பாடுகிறாய் போலும்.