Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 385)
Paththati 14 - நாத பத்ததி
அவரோகதஸ்ய ரங்கபர்த்து: கதிஷு வ்யஞ்ஜித கர்ப்பரத்ந நாதா ப்ரதி ஸம்ல்லபஸீவ பாதுகே த்வம் கமலா நூபுர மஞ்ஜு சிஞ்ஜிதாநாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் அந்தப்புரத்திற்கு ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரமாக வருகிறான். அப்போது உன்னிடமிருந்து இனிய ஒலி எழுகிறது. இதனைக் கேட்கும்போது எவ்விதம் உள்ளது என்றால் - அந்தப்புரத்தில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் உள்ள தண்டைகள் எழுப்பும் ஒலிக்கு, நீ பதில் அளிப்பது போன்று உள்ளது.