Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 384)
Paththati 14 - நாத பத்ததி
ஸ்வததே கிம் இஹ ஏவ ரங்கநாத: மயி திஷ்டந் யதி வா பதே பரஸ்மிந் இதி ப்ருச்சஸி தேவி நூநம் அஸ்மாத் மதுரை: த்வம் மணிபாதுகே நிநாதை:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இனிமையான நாதம் எப்படி உள்ளது என்றால் – என் மீது உறைகின்ற ஸ்ரீரங்கநாதன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது ஸ்ரீரங்கவிமானத்தில் உள்ள அவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா அல்லது பரமபதத்தில் உள்ளவன் உங்களுக்குப் பிடித்தபடி உள்ளானா - என்று நீ அனைவரிடமும் கேட்பது போன்று உள்ளது.