Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 383)

Paththati 14 - நாத பத்ததி

விஹிதேஷு அபிவாதநேஷு வேதை: கமந உதீரித கர்ப்பரத்ந நாதா மதுரம் மதுவைரி பாதரக்ஷே பவதீ ப்ரத்யபிவாதநம் விதத்தே

மது என்னும் அரக்கனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்திற்கு முன்பாக வேதங்கள் உனக்கு அபிவாதநம் (சிறியவர்கள் பெரியவர்களை வணங்கும்போது, தான் இன்ன கோத்ரம், தனது பெயர் இன்னது போன்ற விவரங்களைக் கூறுதல்) செய்தபடி உள்ளன. அப்போது உனது இரத்தினக்கற்களின் இனிமையான நாதம் மூலம், அவர்களுக்கு ப்ரதிஅபிவாதநம் (ஆசி கூறுதல்) செய்கிறாய் போலும்.