Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 382)

Paththati 14 - நாத பத்ததி

முரபித் மணிபாதுகே பவத்யா: ஸ்துதிம் ஆகர்ணயதாம் மயா நிபத்தாம் அவதீரயஸீவ மஞ்ஜுநாதை: அசமத்காரவசாம்ஸி துர்ஜநாநாம்

முரன் என்ற அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைப் பற்றிய இந்த ஸ்துதியை நான் கூறும்போது, ஒரு சில துர்மதி கொண்டவர்கள் இதனை தூஷித்துப் பேசக்கூடும். அந்தச் சொற்களை நீ உனது அழகான இசை போன்று எழும் சப்தம் கொண்டு அடக்குகிறாய் போலும்.