Sri Paduka Sahasram - Paththati 14 - நாத பத்ததி (ச்லோகம் 381)
Paththati 14 - நாத பத்ததி
ச்ருதீநாம் பூஷணாநாம் தே சங்கே ரங்கேந்த்ர பாதுகே மித: ஸங்கர்ஷ ஸஞ்ஜாதம் ரஜ: கிம் அபி சிஞ்ஜிதம்
ஸ்ரீரங்கராஜனின் பாதுகையே! உன் மீது பலவிதமான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நம்பெருமாள் சஞ்சாரம் செய்யும்போது, அவை ஒன்றன் மீது ஒன்று மோதியபடி, உருண்டு சப்தம் எழுப்புகின்றன. இதனைக் காணும்போது, வேதங்கள் ஒன்றுடன் ஒன்று உரைதலால் ஏற்படும் தூசிகள் போன்று உள்ளன.
நம்பெருமாள் வீதியில் சஞ்சாரம் செய்யும்போது, அதனைக் காண நிற்பவர்கள் மீது பாதுகையின் தூசிகள் விழுந்து நன்மை அளிக்கின்றன. ஆனால் ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியில் வர இயலாத சூழ்நிலை இருக்கலாம். அவர்களுக்கு பாதுகையின் ஒலியானது நன்மை அளிக்கிறது.