Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 379)
Paththati 13 - பராக பத்ததி
நிஷ்ப்ரத்யூஹம் உபாஸிஷீமஹி முஹு: நிச்சேஷதோஷச்சித: நித்யம் ரங்கதுரந்தரஸ்ய நிகம ஸ்தோம அர்ச்சிதே பாதுகே தத்தே மூர்த்தபி: ஆதி பத்ம ஜநிதா தத்தாத்ருசீ ஸந்ததி: யத் ஸஞ்சார பவித்ரித க்ஷிதி ரஜ: பங்க்திம் சது: பஞ்சஷை:
அனைத்துவிதமான பாவங்களையும் போக்குபவனாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள், வேதங்கள் அனைத்தாலும் உயர்வாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றை நாம், நம்முடைய செயல்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக உபாஸிப்போமாக. இவற்றின் சஞ்சாரத்தால் இந்தப் பூமி தூய்மை அடைகிறது. இந்த உலகின் காரணமாக உள்ள ஸ்ரீரங்கநாதனின் நாபியில் உள்ள தாமரை மலரில் இருந்து தோன்றிய உபாஸகனின் பரம்பரையில் வந்த நான்கு, ஐந்து, ஆறு தலைகளால் பாதுகை தாங்கப்பட்டபடி உள்ளது.
பாதுகையை ஆராதிப்பவர்களின் குடும்பத்தில் பிள்ளை, தந்தை, தாத்தா, கொள்ளுத்தாத்தா என பல தலைமுறையினர் ஒரே நேரத்தில் இருந்து பாதுகையை ஆராதனை செய்தபடி வாழ்வார்கள் என்று கருத்து.