Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 378)
Paththati 13 - பராக பத்ததி
பவந தரளித: தே பாதுகே ரங்கபர்த்து: விஹரண ஸமயேஷு வ்யாப்த விச்வ: பராக: விஷம விஷய வர்த்தம் வ்யாகுலாநாமஜஸ்ரம் வ்யபநதி ஜநாநாம் வாஸநா ரேணு ஜாலம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் சஞ்சாரம் செய்யும்போது உனது தூசிகள் காற்றினால் அனைத்து இடங்களிலும் பரவுகின்றன. இவை செய்வது என்ன? மேடு பள்ளங்கள் என்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகவிஷயங்களின் பொருட்டு அலைகின்ற மக்களின் தவறான வாஸனை என்னும் புத்தியை நீக்கிவிடுகின்றன.