Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 377)

Paththati 13 - பராக பத்ததி

சுப ஸரணி ரஜோபி: சோபயந்தீ தரித்ரீம் பரிணதி ரமணீயாந் ப்ரக்ஷரந்தீ புமர்த்தாந் பவஸி புவந வந்த்யா பாதுகே ரங்கபர்த்து: சரணம் உபகதாநாம் சாச்வதீ காமதேநு:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைவர்களாலும் வணங்கத் தகுந்தவளாக உள்ள நீ, அனைவருக்கு நன்மை ஏற்படுத்தவல்ல மங்களகரமான உனது தூசிகள் மூலம், இந்தப் பூமியை ஏற்றத்துடன் வைக்கிறாய். அனைவருக்கும் இன்பம் அளிக்கவல்ல புருஷார்த்தங்களை நீ அளிக்கவல்லவளாக உள்ளாய். இந்த உலகில் உள்ளவர்கள் சரணம் என்று உன்னை அடைந்துவிட்டால், அழியாமல் உள்ள அனைத்தையும் கொடுக்கவல்ல காமதேனு போன்றாகிறாய்.