Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 376)

Paththati 13 - பராக பத்ததி

ரஜநி விகமகாலே ராமகாதாம் படந்த: குசிகதநயமுக்யா: பாதுகே பாவயந்தே உபலசகல ஸக்தை: த்வத் பராகை: அகாண்டே ஜநிதமுநி களத்ராந் தண்டகாரண்ய பாகாந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! விடியற்காலை நேரத்தில் இராமனுக்கு ஸுப்ரபாதம் போன்ற துதிகளைக் கூறுபவர்களான விச்வாமித்திரர் போன்ற முனிவர்கள் செய்வது என்ன? அவர்கள் உனது தூசிகள் திடீரென ஒரு கல் மீது விழுந்து, அந்தக் கல் ஒரு பெண்ணாக மாறிய இடமாகிய தண்டகாரண்யத்தையே நினைத்தபடி உள்ளனர்.