Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 375)
Paththati 13 - பராக பத்ததி
பரிணதிம் அகடோரம் ப்ராப்தயா யத்ப்ரபாவாத் அலபத் அசிலயா ஸ்வாந் கௌதமோ தர்மதாராந் புந: உபஜநி சங்கா வாரகம் பாதுகே தத் ப்ரசமயதி ரஜஸ்தே ராகயோகம் ப்ரஜாநாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது தூசிகள் மூலம் ஒரு கல்லானது, சிறிதும் கடினத்தன்மை இல்லாததும் மென்மையானதும் ஆகிய அகலிகை என்ற பெண்ணக மாறியது. இதன் மூலம் கௌதம முனிவர் தனது தர்மபத்தினியை மீண்டும் அடைந்தார். இப்படி உள்ள இந்தத் தூசிகள், எங்கள் போன்ற மக்களுக்கு மறுபிறப்பை ஏற்படுத்தவல்ல உலக விஷயங்களின் மீது உள்ள ஆசை என்பதை நீக்குகின்றன.