Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 374)
Paththati 13 - பராக பத்ததி
பஞ்சாயுதீ பூஷணம் ஏவ சௌரே: யதஸ் தவைதே மணிபாதரக்ஷே விதந்வதே வ்யாப்ததிச: பராகா: சாந்த உதயாந் சத்ரு சமூ பராகாந்
இரத்தினக்கற்கள் கொண்டு பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனிடம் சங்கு, சக்கரம், கதை, வில்,வாள் என்னும் ஐந்து ஆயுதங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமே உள்ளன. அவை ஆயுதங்களாக இல்லை. இதன் காரணம், அனைத்துத் திசைகளிலும் சென்று பரவுகின்ற உன் தூசிகள், ஆங்காங்கு உள்ள விரோதிகள் என்ற தூசிகளை மேலே கிளம்ப இயலாமல் செய்துவிடுகின்றன அல்லவோ?