Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 373)
Paththati 13 - பராக பத்ததி
பச்யாமி பத்மேக்ஷண பாதரக்ஷே பவாம்புதிம் பாதும் இவ ப்ரவ்ருத்தாந் பக்த உபயாந த்வரயா பவத்யா: பர்யஸ்ய மாநாந் அதவீபராகாந்
தாமரை மலர் போன்ற அழகான கண்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது அடியார்களுக்கு உண்டாகும் துன்பத்தை நீக்க நீ விரைவாகச் செல்லும்போது பெரும்புழுதி எழுகின்றது. அவை ஸம்ஸாரம் என்ற கடல் மீது படிந்து, அந்தக் கடலை மூடி, வற்றும்படிச் செய்வதை நான் காண்கிறேன்.