Sri Paduka Sahasram - Paththati 13 - பராக பத்ததி (ச்லோகம் 372)
Paththati 13 - பராக பத்ததி
ததாகதா ராகவ பாதரக்ஷே ஸம்பச்யமாநேஷு தபோதநேஷு ஆஸீத் அஹல்யா தவ பாம்ஸுலேசை: அபாம்ஸுலாநாம் ஸ்வயம் அக்ரகண்யா
ரகுவம்சத்தில் அவதரித்த இராமனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! கல்லாகக் கிடந்த அகலிகை என்ற பெண்ணை, அனைத்து முனிவர்களும் பார்த்து கொண்டிருக்கும்போதே உனது சிறிய தூசிகள், மீண்டும் பெண்ணாக மாற்றின. இதன் மூலம் இவளே சிறந்த பெண்களுக்குள் முதல் பெண்ணாகக் கருதப்பட்டாள்.